வெற்றிலை வளர்ப்பு.....🍃🍃🍃
வெற்றிலை வளர்ப்பு.....🍃🍃🍃
பொதுவாகவே வெற்றிலைக்கொடி வளர்ப்பதற்க்கு நிழற்பாங்கான இடமே சிறந்தது. வயல்வெளிகளில் அகத்திக் கீரை மரத்திற்கு கீழே ஊடுபயிராக வெற்றிலை கொடியை வளர்க்கின்றனர். நமது வீட்டில் வெற்றிக்கொடியை சுலபமாக வளர்க்கலாம். முதலில் வெற்றிலை கொடியை வளர்ப்பதற்கு நிழற்பாங்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டுமென்றால் தோட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு மரத்திற்கு கீழே வெற்றிலை கொடியை வைத்து மரத்தின் மேல் படற விடலாம்.
மாடி தோட்டத்தில் வெற்றிலை வளர்க்க முதலில் தரமான, சரியான மண் கலவை தயாரிக்க வேண்டும்.
1.தோட்டத்துமண்/செம்மண்- 2 மடங்கு.
2.மணல்/தேங்காய் நார் கழிவு-1 மடங்கு
3.மண்புழு உரம்/காய்கறி கழிவு உரம்/தொழு உரம்-1 மடங்கு
4. வேப்பம்புண்ணாக்கு/ வேப்பம் கொட்டை பொடி- ஒருகைப்பிடி அளவு
5.உயிர்உரங்கள்- சூடோமோனஸ், ட்ரைக்கோட்ரமாவிரிடி,
அசோஸ்பைரில்லம், பொட்டாஷ்பாக்டிரியா-அனைத்திலும் ஒரு ஸ்பூன்.
மண் கலவை தயார் செய்து ஏழு நாட்கள் நிழற்பாங்கான இடத்தில் வைத்து,மண்கலவை தயாரானதும், வெற்றிலை கொடியை நடவு செய்யலாம்.
மாடித்தோட்டத்தில் வெற்றிலையை வைக்கும்போது நிழற்பாங்கான இடத்தில் வைப்பது மிகவும் சிறந்தது. அதிக வெயில் படும்படியான இடத்தில் வெற்றிலை கொடியை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வெற்றிலைக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
வெயில் காலங்களில் வெற்றிலைக் கொடியின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும் வெற்றிலையின் இலைகளின் ஓரத்தில் காய்ந்துபோய் இருக்கும் இது பொட்டாசியம் குறைபாடு. இந்த நேரத்தில் சாம்பல் அல்லது வாழைப்பழத்தோல் தண்ணீரில் ஊறவைத்து வேர்பகுதியில் ஊற்றி வந்தால் இலைகள் ஓரத்தில் காயாமல் வெற்றிலை கொடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.
வெற்றிலைக் கொடிக்கு என்று தனியாக உரங்கள் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டிலேயே இருக்கும் அரிசி கழுவிய தண்ணீர், மன்புழு உரம் , மக்கிய மாட்டு உரம் , புளித்த மோர், இளநீர் தண்ணீரில் கலந்து கொடுத்து வரலாம்.
வெற்றிலை கொடிக்கு அதிக தழைச்சத்து சாம்பல் சத்தும் கொடுப்பது அவசியம்.
Comments
Post a Comment