கீரைகளின் நன்மைகள்
1. பசலைகீரை
2. மணத்தக்காளி கீரை
3. கானாவாழை
4. வெள்ளை பொன்னாங்கன்னி
5. புதினா
6. தூதுவளை
7. சிகப்பு தண்டு கொடிபசலை
8. பிரண்டை
9. முள்ளங்கி கீரை
10. லச்லக்கெட்டை கீரை
11. முருங்கை கீரை
12. முளைக்கீரை
13. பச்சை கொடிபசலை
14. சிகப்பு பொன்னாங்கண்ணி
15. பருப்புகீரை
16. அம்மான் பச்சரிசி
17. பாலக்கீரை
18. முடக்கத்தான்
19. நாட்டு பொண்ணாங்கன்னி
20. அகத்திகீரை
21.குப்பைமேனி கீரை
22.துத்திகீரை
23. தவசிகீரை
24.கருவேப்பிலை
25. கல்யாண முருங்கை
26.முசுமுசுக்கை கீரை
27.சாரனைக்கீரை
28.வல்லாரைக்கீரை
29.கொத்தமல்லிகீரை
30.புளிச்சக்கீரை
31 கீழாநெல்லி
32.காசினிக்கீரை
33. மூக்கிரட்டை கீரை
34. கோவைக்கீரை
35.சக்கிரவர்த்தி கீரை
36. வெந்தயக்கீரை
37. கரிசலாக்கண்ணி
38. எலுமிச்சை புல்
39.ஆடாதொடை
40. குப்பைகீரை
41. தும்பை கீரை
42.கற்பூரவல்லி
43. சொடக்கு தக்காளி கீரை
44. துளசி
45. புண்ணாக்கு கீரை
46. வெற்றிலை
47. திருநீர் பச்சிலை
48. வாதநாராயனன் கீரை
49. இன்சுலின் கீரை
50. பூந்தாழை ரம்பை
51.காட்டுக்குடுகு கீரை /நாய்வேளை கீரை
52.ஆரை கீரை
53. தரைபசலைகீரை
54.ஆவாரை இலை
55.நல்வேளை கீரை (தைவேளை கீரை)
56.பொடுதலைகீரை
57.சங்குபூ இலை
58.நாயுருவிக்கீரை
59. நொச்சி இலை
60. இரணகள்ளி
61 முள்ளிக்கீரை
62.பண்ணைக்கீரை/மகிலிக்கீரை
63.சோம்புகீரை
64. சேம்புக்கீரை
65.சுக்காங்கீரை
66.மணலிக்கீரை
67. துயிலிக்கீரை/தொய்யல்கீரை/
68. பரட்டை கீரை
69.பாகல் இலை
70.தாமரை இலை
71. கற்றாழை
72.அருகம்புல்
73.மந்தாரை இலை
74. நிலவேம்பு இலை
75. பேய்மிரட்டி
76. இலந்தை இலை
77.கொய்யா இலை
78.கண்டங்கத்திரி இலை
79.பூசனி இலை
80. நார்த்தை இலை
81.பப்பாளி இலை
82 வாழை இலை
83. அரச இலை
84.பீர்க்கன் இலை
85. மா இலை
86. செம்பருத்தி (செம்பரத்தை)
87.சீமை அகத்தி இலை
88 – மாதுளை இலை
89 – அவுரி இலை
90 -பூவரசு இலை
91 – தொட்டால்சிணுங்கி கீரை
92 – மலைவேம்பு
93 – வில்வ இலை
94 – அதொண்டை கீரை
95 – புளியங்கீரை
96 – சதகுப்பைகீரை
97. வேலிப்பருத்தி கீரை
98. தாளிக்கீரை
99 – அண்டவாயுக்கீரை /பால்பெருக்கிகீரை
100 – ஆல இலை
* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
* சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
* பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
* கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
* மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
* குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
* அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
* புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
* பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
* பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
* சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
* வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
* வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
* புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
* தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
* முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
* முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
* பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
* புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
* மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
* மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
* முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
* சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
* வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
* தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
* தவசிக்கீரை - இருமலை போக்கும்.
* சாணக்கீரை - காயம் ஆற்றும்.
* வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
* விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
* கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
* துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
* துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
* காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
* மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
* நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண்து
கலவைக்கீரைன்னா என்ன? எப்படி சமைக்கணும்? என்ன சத்து கிடைக்கும்?
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் வாரம் ஒருநாள் கலவைக்கீரை இடம்பெறும். எல்லா சுவைகளையும் சத்துகளையும் சேர்த்து ஒரு கப்பில் பெற்றுவிட முடியும். கலவைக்கீரை என்றால் என்ன எப்படி எடுத்துகொள்வது, என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கீரைகள் எப்போதும் சத்து நிறைந்தவை. மூலிகை தாவரங்களாக இருந்தாலும் அவையும் கீரையில் தான் சேர்ப்பார்கள் நம் முன்னோர்கள். மழைக்காலங்களிலும், மழைக்கு பிந்தைய காலங்களிலும் வயல் ஓரங்களிலும், வேலிப்பகுதியிலும், தோட்டங்களிலும், வரப்புகளிலும் இருக்கும் கணக்கிலடங்கா கீரை வகைகளை கண்டறிந்து பறித்து சமைப்பார்கள்.
தினம் ஒரு கீரை என்ற கணக்கெல்லாம் அப்போது கிடையாது. கிடைக்கும் கீரை வகைகள் 10 க்கும் மேற்பட்டு இருந்தாலும் அதை சேர்த்து மசியலாக்கிவிடுவார்கள். கீரைகள் ஒன்றாக இல்லாமல் விதவிதமான கீரை வகைகளை சேர்த்து ஒன்றாக சமைப்பதுதான் கலவைக்கீரை.
அதோடுஅந்த கீரை வகைகள் எல்லாமே இயற்கையாக முளைத்து வந்தவை. இதற்கென பிரத்யேகமாக விதைகள் போட்டு பயிரிடுபவை கிடையாது. ஆர்கானிக் முறை என்று சொல்லகூடிய அதிகமாக முளைத்திருக்க கூடியவை. தற்போது கீரைகளை வாங்கும் நாம் கீரைகளில் பூச்சி இல்லாமல் பளபளப்பாக முழு இலைகளோடு இருக்கும்படி பார்த்து பார்த்து வாங்குகிறோம். இது முழுக்க முழுக்க ரசாயனங்கள் தெளித்த கீரை. இதில் கீரையின் சத்துக்களை காட்டிலும் ரசாயனங்களின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்க கூடும். கீரைகளை வீட்டில் பயிரிடும் முறை குறித்து தனியாக பார்க்கலாம். இப்போது கலவை கீரைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக கீரைகள் எல்லாமே அதிக சத்துக்களை உள்ளடக்கியவை. பல நோய்களை தடுக்கவும் தீவிரம் அதிகரிக்காமல் பாதுகாக்கவும் உதவக்கூடியவை. உடலில் சத்துக்குறைபாட்டை இல்லாமல் செய்யும் அளவுக்கு எல்லா சத்துமே கீரையில் நிறைந்துள்ளது.
கீரைகள் உடலில் ரத்தசோகை குறைபாட்டை உண்டாக்காது. ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை தடுக்க கூடியது. மலச்சிக்கல், எலும்பு தேய்மானம், மாதவிடாய் தொந்தரவுகள், நீரிழிவு, கெட்ட கொழுப்பு ,மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை வராமல் தவிர்க்க கீரைகளை நிறைவாக எடுத்துகொண்டாலே போதுமானது. வீட்டில் இயற்கை முறையில் பயிரிடப்படும் கீரைகள் புற்றுநோய் அபாயத்தையும் கூட தடுக்க கூடியவை. கலவைக்கீரை வகையில் கையில் கிடைக்கும் கீரைகளின் வகைக்கேற்ப சேர்த்துகொண்டே போகலாம்.
கீரை வகைகளில் அரைக்கீரை, முளைக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளிக்கீரை, புளிச்சக்கீரை, முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை,பண்ணைக்கீரை போன்றவற்றை தான் அடிக்கடி வாங்கி சமைப்போம்.
ஆனால் *கலவை கீரையாக இருக்கும் போது கூடுதலாக சுக்கான் கீரை, வல்லாரைக்கீரை, துத்திக்கீரை, தும்பை இலை, குப்பைக்கீரை, முள்முருங்கை, கீழாநெல்லிக்கீரை, பொடுதலைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுவளை, காசினிக்கீரை, தும்பை, முடக்கறுத்தான், கற்பூரவல்லி என இவற்றையும் சேர்த்து கிடைக்கும் கீரைவகைகளை சேர்த்து ஒன்றாக்கி சமைப்பதுதான் கலவைக்கீரை.*
எதற்கு இவ்வளவு கீரை வகைகளை சொன்னோம் என்றால் பலரும் அடிக்கடி கிடைக்கும் அரைக்கீரை சிறுக்கீரை, பாலக்கீரை போன்றவற்றை சேர்த்து கடைந்தால் அது தான் கலவைக்கீரை என்று நினைக்கிறார்கள். ஆனால் கலவைக்கீரை என்பது மூலிகை குணங்களை கொண்ட மருத்துவக்கீரைகளும் சேர்த்துதான்.
கீரைகளின் நன்மைகள்
மேற்கண்ட கீரை வகைகளில் உங்களுக்கு கிடைக்கும் கீரை வகைகளை வாங்கி மசித்துகொடுத்தால் அதிகப்படியான ஊட்டம் உடலுக்கு கிடைக்கும். எப்படி சத்து மாறாமல் சமைப்பது என்று பார்க்கலாம்
தேவை
எல்லாவகையான கீரையும் - தலா அரைக்கைப்பிடி
கற்பூரவல்லி இலை - 2 போதுமானது
பூண்டு - இரண்டு கைப்பிடி
பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப
புளி - சிறு எலுமிச்சை அளவு
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
தாளிக்க வடகம், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மண்சட்டியில் அரிசி கழுவிய நீர்விட்டு பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். அரை வேக்காட்டில் கீரையை சுத்தம் செய்து சேர்க்கவும். கீரை வெந்ததும் இறக்கி உப்பு, புளி சேர்த்து மத்தால் மசிக்கவும். காரத்துக்கேற்ப பச்சை மிளகாயை எடுத்து தேவைக்கேற்ப பயன்படுத்தவும். பிறகு தாளிப்பில் வடகம் தேவையெனில் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும். கீரை பச்சைபசேலென இருக்கும்.
வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
சிறுகீரை சிறுநீர் பெருக்கும்.
முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு நன்மை தரும்.
கரிசலாங்கண்ணியும் கீழா நெல்லியும் கல்லீரலுக்கு நன்மை செய்யும்.
வல்லாரை நினைவு சக்தியை அதிகரிக்கும்
மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்
முருங்கைக்கீரை, முளைக்கீரை,பசலைக்கீரை இரும்புச்சத்து கொடுக்கும்
தண்டுக்கீரை குடல் புண் மற்றும் கருப்பை கோளாறுகளை தடுக்க கூடியது. மூல நோய்க்கு நல்லது.
பாலக்கீரை நீரிழிவை தடுக்க கூடியது. ஃபோலிக் அமிலம் கொண்டது.
துத்திக்கீரை மலத்தை இளக்க கூடியது.
அரைக்கீரை வாய்வு பிரச்சனையை போக்க கூடியது.
தூதுவளை சளியை முறிக்க கூடியது.
இவ்வளவு நன்மையையும் பெறலாம். வாரம் ஒரு முறை தனித்து சேர்க்காமல் கலவையாய் கீரையை சேர்த்தால் ருசியும் அபாரமாக இருக்கும். சத்தும் கிடைக்கும்.
Comments
Post a Comment